மாவணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!
அடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது அமைச்சும் அரசாங்கமும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இளைஞர் யுவதிகளுக்கு விசேட இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில், தற்பொழுது உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிதாக தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அமைவாக இதற்கான திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபா தொடக்கம் 1,000 பில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை