காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!
காணாமல் போனவர்களை மீளக்கொண்டுவர முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் இடம்பெற்றது.
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் ஆனால் அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது இனங்களுக்கிடையே உள்ள சகஜ வாழ்வைச் சிதைத்து, நல்லிணக்கத்தை குழப்பி, நாட்டுக்குள் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நடத்தி முடிக்க அழைப்பு விடும் வியத்மக, எலிய, சிங்கள லே போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களையே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் என்னவென்றால், நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்றும் கூறினார்.
தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் தரும் என்பதே என்ற பதாகையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை