ஹொங்கொங்கில் இயல்புநிலை திரும்ப வேண்டும் -சீனா!!
ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் முடிவுக்கு வர வேண்டுமென சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஹொங்கொங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு எப்போதும் ஆதரவளிப்போம் என்று சீனா உறுதியளித்துள்ளது.
ஹொங்கொங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாமுடனான பேச்சுவார்த்துக்கு பின்னரே, சீன பிரதமர் லீ கெகியாங் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியாக நடப்பு ஆண்டில் ஹொங்கொங் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஹொங்கொங்கில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக கேரி லாமுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
ஹொங்கொங்கில் எதிர்பாராத சூழல் நிலவி வரும் போதிலும், அங்கு சமூக ரீதியிலான நிலைத்தன்மையை ஏற்படுத்துவற்கான முயற்சிகளை கேரி லாம் மற்றும் அவரது அதிகாரிகள் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொங்கொங்கில் இயல்புநிலை திரும்ப வேண்டும். அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், போராட்டத்துக்கான மூலக் காரணங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு நிகழும் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டுவதற்கு, சட்டப்படியான நடவடிக்கைகளை கேரி லாம் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.
ஹொங்கொங்கில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி கடந்த 6 மாதங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஹொங்கொங்கே ஸ்தம்பித்து போயுள்ளது.
இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் காலனியாக இருந்த ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து இக்கட்டான சூழலைச் சந்தித்து வருவதாக கேரி லாமிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை