மட்டக்களப்பு அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம்!
புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம் நேற்று(திங்கட்கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், அலிசாகீர் மௌலான, மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மாநகர முதல்வர் ரீ.சரவணபவன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர், பிரதேச சபை தலைவர்கள், அரச திணைக்களங்களின் உள்ளுர் தலைவர்கள், கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படையின் உயரதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 9964 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டிலான 10147 அபிவிருத்தி திட்டத்திற்கான முன்னேற்;றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பூர்த்தி செய்யப்படாத திட்டங்கள் தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டதாக அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை