மனதை நெகிழ வைத்த சம்பவம்.!!
ஊர்காவற்துறையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கேற்ப அங்கு சென்று இருந்தோம்.
உடல் முழுக்க காயத்துடன் தனது மகனுடன் எங்களை வரவேற்றார் தாயொருவர். தாயகத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகள் களமாடிய சம்பவங்கள் பலவற்றை காலச் சூழ்நிலையால் மறந்த நிலையில் இன்று வாழ்கின்றார். கணவன் இறுதி யுத்தத்திலே காணாமல் போன நிலையில் இன்று ஒரே மகனுடன் வாழ்கின்றார். இருப்பதற்கு வீடு கூட இல்லை. வாழ்வதற்கு பொருளாதார வசதி இல்லை. இதை விட ஒரு சகோதரி போராளியாக இருந்து ஒரு கையை இழந்த நிலையிலும் இன்னுமோர் சகோதரி மன நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர். இவர் நண்டு பொறுக்க தினமும் 400ரூபா கூலிக்கு சென்று வருகின்றார். தற்காலிகமாக இருக்கின்ற வீட்டிலும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. எங்களிடம் கேட்டது சொத்து சுகம் எதுவுமில்லை. இம்மாதம் முழுவதும் சாப்பிடுவதற்கு உதவி செய்யுங்கள் என்றே. இளமைக்கால வாழ்வை எமக்காக அர்ப்பணித்து களமாடிய வீரத்தின் வித்து ஒருவர் கேட்பது ஒரு மாத சாப்பாடு!. இதற்கு யார் காரணம்????இதுவா தமிழர்கள் நாம் இவரின் தேசப்பற்றிக்கு செய்யும் வெகுமதி??? எந்த வித பொது அறிவும் மற்றும் கதைப்பதற்கான ஆற்றலும் அற்று இருந்தாலும் போரியலில் இவள் "புலியே "கேட்கும் போதே புல்லரிக்கின்றது. வீர வரலாறுகள்...
தான் பஸ்ஸில் செல்வதற்கு பதில் தினமும் துவிச்சக்கர வண்டியில் வேலைக்கு சென்று சேமித்த பணத்தில் jcc 2000 மாணவனும் இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத்தமிழரும் சமூக சேவையாளருமான திரு s.சஞ்ஜே அனுசரனையில் இன்னும் சில தினங்களில் குட்டி ஈனும் நிலையில் உள்ள இரண்டு ஆடுகளை வழங்கியும் மகனின் கற்றலுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியும் உதவியதுடன், யாழ் இந்துவின் 95ம் ஆண்டு கா.பொ.த உ /த மாணவனும் இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத்தமிழரும் சமூக சேவையாளரும் மனிதாபிமான உதவிகள் பலவற்றை யாழ் எய்ட் ஊடாக வழங்கி வருபவருமான திரு குருபரன் ஒரு மாதத்திற்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி உதவியுள்ளனர்

கருத்துகள் இல்லை