துவங்கியது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’!!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் சார்பில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்து வெளியான 'எல்.கே.ஜி', ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாயகனாக மட்டுமின்றி இப்படத்திற்கு கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் பங்களித்தார் ஆர்.ஜே. பாலாஜி. எல்.கே.ஜி கொடுத்த தன்னம்பிக்கையில், அடுத்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதி முடித்த பாலாஜி, அத்துடன் கதையில் அவரே நாயகனாக நடித்து இயக்கவும் முடிவு செய்தார்.
முக்கிய கதாபாத்திரமாக வரும் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால், நன்றாக இருக்குமே என அவரிடம் இக்கதையை கூறியிருக்கிறார். கதையைக் கேட்ட நயன்தாரா, அதில் மூக்குத்தி அம்மனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அம்மனாக நடிப்பதால் தற்போது சைவத்திற்கு மாறி விரதம் மேற்கொண்டு வருகிறார் நயன்தாரா.
இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பூஜை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நேற்று(நவம்பர் 29) நடந்தது.
அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டப்படப்பிடிப்பின் இறுதியில் நயன்தாரா பங்கேற்வுள்ளார். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை