கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு!
கோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் பழனிசாமி (நவம்பர் 29) தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகரத்தின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, குடிநீா் தவிர வேறு வகையான நீரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகக் கழிவுநீரை மூன்றாம் நிலைக்குச் சுத்திகரிப்பு செய்து அவற்றைத் தொழிற்சாலை மற்றும் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்துவது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. முதல்கட்டமாகக் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் வடசென்னை, மணலியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி ”உபயோகிக்கப்பட்ட ஒவ்வொரு துளி நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உபயோகத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
பொதுவாகக் கழிவு நீரில் உள்ள அந்த அசுத்தத்தை நீக்கி அனைவரும் அந்த நீரைப் பருகக் கூடிய அளவிற்குச் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகள் பயன்படுத்த தகுந்த நீராக மாற்றம் செய்யும் மறுசுழற்சி முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. முதல்நிலை சுத்திகரிப்பில், கழிவுநீரைத் தற்காலிகமாகத் தேக்கி வைக்க வேண்டும்.
அதில் கடின திடப் பொருட்கள் யாவும் அடியில் படிந்தும், எண்ணெய் மற்றும் எளிய திடப்பொருட்கள் மேற்பரப்பில் மிதக்கும். அடியில் படிந்த மற்றும் மிதக்கும் பொருட்கள் நீக்கப்பட்டு, எஞ்சிய தண்ணீர் இரண்டாம் சுத்திகரிப்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்கிருமிகளைப் பிரித்து எடுத்து நீக்கப்படுகிறது. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு என்பது வேதி முறையிலோ, வடிகட்டுதல் முறையிலோ, இரண்டு நிலைகளுக்கு பின்பும் சுத்திகரிக்கப்படுவதாகும்.
இவ்வாறு மூன்றாம் நிலை சுத்திகரிப்பிற்குப் பின்னர் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை நன்னீருக்குப் பதிலாக நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கோ, விவசாயத்திற்கோ, தொழில் நிறுவனங்களுக்கோ அல்லது குடிப்பதற்குக் கூட பயன்படுத்தலாம். இதன் மூலம் இப்பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நன்னீர் குறைக்கப்பட்டு, அந்த நன்னீர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ”இன்று திறக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தற்பொழுது தினசரி வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட உள்ளது. தற்போது இரு நிலையங்கள் முழுமையாகச் செயல்படுவதன் மூலம் சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறுசுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழும். தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நன்னீர் இனிமேல் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். இத்துடன் ஏற்கனவே சென்னை மாநகர் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யச் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களின் மூலம் கிடைக்கும் நீரையும் பயன்படுத்தினால், சென்னை நகருக்கு பருவமழை பொய்த்தாலும், தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை