அவளுக்கு அரசியல் புரியாது: மகளின் பதிவு குறித்து கங்குலி!!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சனா கங்குலி போட்டதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து அவரது அப்பாவும் பிசிசிஐ தலைவருமான கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி குடியுரிமைச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவு என்பதாக ஒரு ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது.
சனா இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாகக் கூறப்படும் அந்தப் பதிவில் , குஷ்வந்த் சிங்கால் எழுதப்பட்டு 2003-ஆம் ஆண்டு வெளியான 'தி எண்ட் ஆஃப் இந்தியா' (The end of India) என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு வாசகம் இருந்தது.

“நான் முஸ்லீம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல அதனால் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மீதும் மேற்கத்திய இளைஞர்கள் மீதும் அவர்கள் வைத்த குறி நாளை உங்கள் மீதும் பாயும். நீங்கள் அடக்குமுறைக்குள் கொண்டுவரப் படுவீர்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படி இருக்க வேண்டும். நீங்கள் இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்தக் கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் கூறும் பற்பசையைத்தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்கி அன்பை வெளிப்படுத்திக் கொள்வற்குப் பதிலாக `ஜெய் ஸ்ரீராம்' என்று தான் முழங்க நேரிடும். யாரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள இதை உணர வேண்டும்” என்பதாக அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் இருந்த வாசகம் பொருள் தந்தது.
இதனைப் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும் இது பெரும் விவாதத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் 18 வயதாகும் சனா கங்குலியின் இந்தப்பதிவு குறித்து அவரது தந்தை கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
Please keep Sana out of all this issues .. this post is not true .. she is too young a girl to know about anything in politics
இதைப் பற்றி 11.1ஆ பேர் பேசுகிறார்கள்
கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து, ‘தயவுசெய்து இந்த பிரச்னையிலிருந்து சனாவை ஒதுக்கி வையுங்கள். இந்தப் பதிவில் உண்மையில்லை. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள முடியாத சிறிய வயதில் சனா இருக்கிறார்’ என்று பதிவிட்டிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை