வழக்குத் தாக்கலில் சிக்கிய 668 வியாபார நிறுவனங்கள்!!

2019ஆம் ஆண்டில் 668 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி எஸ். நிலாந்தன் தெரிவித்தார்.


கடந்த வருடம் தமது திணைக்களத்தால் மேற்கோள்ளபட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தமாக 668 வியாபார நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு பொருட்களை, பண்டங்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, போலித் தயாரிப்புக்கள் மற்றும் குறியீடற்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை, மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்களை உத்தரவாத சீட்டு வழங்கப்படாமல் விற்பனை செய்தமை, வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதிப் பணத்திற்கு பதிலாக இனிப்புப் பொருட்களை வழங்குகின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக எம்மால் சட்ட நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டன” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.