பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் எச்சரிக்கை!

ஸ்கொற்லாந்தில் வளங்களின் பற்றாக்குறை மற்றும் பணி வெற்றிடங்களின் அதிகரிப்பு காரணமாக தேசிய சுகாதார தொழிலாளர்கள் (National Health Service) மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அமைப்பின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.


தேசிய சுகாதார தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினருக்கு, பணி அழுத்தம் காரணமாக அவர்களது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிரித்தானிய மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நேர்சிங் கணக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவர்களின் நலன் மிக முக்கியமானது என்றும் அந்த நிலைமைகளை மேம்படுத்துவதற்காக செயற்படுவதாகவும் ஸ்கொற்றிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.

இதனிடையே, British Medical Association மேற்கொண்ட கணக்கெடுப்பில் பதிலளித்த சுகாதார தொழிலாளர்கள் 800 பேரில் 77% பேர் தங்கள் பணிகள் கடந்த ஆண்டில் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பதிலளித்தவர்களில் 83% பேர் தங்கள் பணிச்சுமை அதிகரிப்பபை உணர்வதாகவும் 80% பேர் அநேக சந்தர்ப்பங்களில் பணி நேரத்திற்கு அப்பால் நீண்டநேரம் பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே, மருத்துவர்களுக்கான நிலைமைகளை மேம்படுத்த நாடு முழுவதும் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்புக்களை இணைந்து பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்கொற்லாந்து அரசாங்கத்திற்கு British Medical Association கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA)  தலைவர் வைத்தியர் லூயிஸ் மொரிசன் கூறுகையில், “எங்கள் கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு மருத்துவர்கள் தங்கள் முதலாளி, ஊழியர்களின் நல்வாழ்வுக்கு போதுமான ஆதரவை அளிப்பதாக நம்பவில்லை என்று தெரிவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது மாற வேண்டும்.

ஸ்கொஙற்லாந்து மக்களைப் பராமரிப்பவர்களை கவனித்துக்கொள்வது முன்னுரிமையாக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே இது குறித்து இணைந்து செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.