அமெரிக்க டொலர்களுடன் ஒருவர் கைது!

தம்லகமுக - மொல்லிய பொதான பகுதியில் ஒரு தொகை அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதனவரிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நாணயத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து ஒரு மில்லியன் மதிப்புள்ள பித்தளை தகடுகள், பித்தளை நாணயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும் பொலிஸ் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நாணயத்தாள்கள் அமெரிக்க மத்திய வங்கியினால் வெளியிடப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு, அவற்றிற்கான ஆவணங்களும் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.