கடின உழைப்பு என்றும் வீண் போகாது!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் சூரிய கிரகணத்தை பதிவு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
டிசம்பர் 26ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தருணத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக பெரும் சிரத்தை எடுத்துள்ளார் புகைப்பட கலைஞர் ஜோஷ்வா கிரிப்ஸ்.

தற்போது, அவர் எடுத்த இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தை தான் எப்படி திட்டமிட்டு எடுத்தேன் என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டோரி பிரிவில்  பதிவு செய்துள்ளார்.

Image Credit - Joshua Cripps Photography

Via : V2K photography page.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.