கிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் கிராமத்தில் 100 மாணவர்களுக்கு உதவி!

28/12/19யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர்களான

யேர்மனி (Team) சேர்ந்த திரு புஸ்பநாதன் குடும்பத்தினர் !
தொடர்ச்சியான தாயகம் நோக்கிய கொடுப்பனவாக !
எமது வருங்காள சமூகம் சிறந்த கல்வி மாண்களாக உருவாகவேண்டும் என்ற நோக்கில்!
இன்றும் கிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் திருகோணமலையில் அமைந்துள்ள!
தி/மேன்கமம் அ.த.க பாடசாலையை சேர்ந்த மிகவும் கஸ்ரப்பட்ட நூறு (100) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யுமாறு இந்த பாடசாலை தலைமை ஆசிரியர் கேட்டதற்கு இணங்கி!
இந்த உதவியை வழங்கியுள்ளோம்!
இந்த மாணவர்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டவர்கள் என்பதை அவர்கள் அணிந்திருக்கும் பாதணிகளை அவதானிக்கும் போது தெரியும்!
இந்த உதவியை கேட்டவுடன் முன்வந்து வழங்கிய நாதன் குடும்பத்தினருக்கும் !இந்த மாணவர்களின் தேவையை அறிந்து இனம் காட்டி
இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது திருகோணமலை மாவட்ட செயல்பாட்டாளர் திரு முரளி அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 
Powered by Blogger.