க.பொ.த. உயர்தரப் பரீட்சை – முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்!!

2019ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் கணித பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.


அதற்கமைய அக் கல்லூரியின் மாணவன் தருஷ ஷெஹான் பொன்சேகா நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல வணிக பிரிவில் (பழைய பாடத்திட்டம்) பத்தேகம கிறிஸ்துதேவ கல்லூரியைச் சேர்ந்த நிரோஷன் சந்தருவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நாடளாவிய ரீதியல் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அதற்கமைய பொறியியல் தொழில்நுட்பத்தில் (புதிய பாடத்திட்டம்) குறித்த கல்லூரியின் வினுர ஒசத கால்லகே முதலிடம் பெற்றுள்ளார்.

அதேபோல, கலைப் பிரிவில் (பழைய பாடத்திட்டம்) ஸ்ரீநிபுண விராஜ் ஹெட்டியாராய்ச்சி முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, கொழும்பு விசாகா கல்லூரியைச் சேர்ந்த சச்சினி விஜேவர்தன உயிரியல் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் கொழும்பு மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷானி வெலிகமகே, நாடளாவிய ரீதியில் கலைப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும்.

கடந்த ஓகஸ்ற் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.