பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரி வவுனியாவில் பேரணி!

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரியும்  பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க கோரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.


கிராமிய பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவி பத்மநாதன் பிரியாவின் தலைமையில் குறித்த பேரணி இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வாடிவீட்டில் ஆரம்பமாகிய இந்த ஊர்வலம், கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்து வவுனியா வர்த்தக சங்க கட்டடம் வரை சென்று நிறைவுற்றது.

இதன்போது குறித்த விடயங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன்,  வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக நலன்புரிச்சங்கத்தினருக்கு மகஜரொன்றும்  கையளிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.