ஜார்க்கண்ட் தேர்தல்: வெடிகுண்டு வைத்து பாலம் தகர்ப்பு!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13
தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 82 தொகுதிகள் உள்ளன. இன்று(நவம்பர் 30) முதல் டிசம்பா் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக சதாரா, கும்லா, பிஷுன்பூர், லோஹர்தாகா, மணிகா, ரேட்கர், பங்கி, தால்தோகாஞ்ச், பிஷ்ரம்பூர், சதார்பூர், ஹூசைன்பாத், கார்வா, பவாந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 13 தொகுதிகளில், 15 பெண் வேட்பாளர்கள் உட்பட 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுபே கூறுகையில், " 13 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 892 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,262 இடங்களில் தேர்தல் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு. காலை 11 மணி நிலவரப்படி 27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதே சமயம், நக்சலைட்டுகள் அதிகமுள்ள பகுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, போலீஸ் கூடுதல் டிஜிபி முராரி லால் மீனா கூறுகையில், " நக்சலைட்டு அதிகமாக இருக்கும் இடங்களில் ஆயிரத்து 97 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 461 வாக்குப்பதிவு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாக நடக்கும் வகையிலும், நக்சலைட்டுகளால் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் இருக்கும் வகையிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இந்நிலையில், கும்லா தொகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கும்லா தொகுதிக்கு உட்பட்ட காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்ணுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் இன்று காலை வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. ஜார்க்கண்ட் தேர்தலில், பாஜக முதன் முறையாக தனித்து போட்டியிடுகிறது.
காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. முக்கிய வேட்பாளர்களாக பாஜக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ராமச்சந்திர சந்திரவான்சி பிஷ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், லோகர்தாகா தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காலை ஜார்க்கண்ட் மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜார்க்கண்ட் மாநிலம் ஊழல் மற்றும் நக்சலிஸத்திலிருந்து விடுபடவும்; வளர்ச்சியின் வேகத்தை மீண்டும் இங்கு பராமரிக்கவும்; ஒரு நிலையான, தீர்க்கமான மற்றும் முழுமையான பெரும்பான்மை அரசாங்கம் அவசியம். முதல் கட்ட வாக்காளர்கள் அனைவரிடமும் அதிகபட்ச எண்ணிக்கையில் வாக்களிப்பதன் மூலம் ஜார்க்கண்டை வளர்ச்சியின் பாதையில் வைத்திருக்க பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "ஜார்க்கண்ட் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இன்று வாக்கெடுப்பு நடக்கும் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தின் திருவிழாவை வளப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டார்.

கருத்துகள் இல்லை