‘இஸ்பேட் ராஜா’ படத்தில் கழுகு ராணி!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில், பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார்.
கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த கழுகு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து
சமீபத்தில் வெளியானது கழுகு 2. முதல் பாகத்தைப் போல இப்பாகம் ரசிகர்களை ஈர்க்கத் தவறினாலும், பிந்து மாதவியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்தார் பிந்து மாதவி.
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. அடுத்ததாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் கவனம் ஈர்ப்பவர் இவர். தற்போது மூன்றாவது படத்திலும் புதுமையான திரைக்கதையோடு களம் இறங்கியிருக்கிறார் ரஞ்சித். கதாநாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தை, Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் தேவராஜூலு கூறும் போது, “ரஞ்சித் ஜெயக்கொடி, தனித்தன்மை வாய்ந்த கதைகளைத் தேர்வுசெய்து, விறுவிறுப்பான படங்களாகக் கொடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் நான் படம் தயாரிக்க இதுவே முதல் காரணம். மேலும், தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய களத்தில் கட்டமைக்கப்பட்ட கதை ஒன்றை விவரித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப்பட்டது” என்றார்.
பெண்களை மையப்படுத்திய, முழுக்க முழுக்க த்ரில்லர் வகையைச் சேர்ந்தது இப்படம் என படக்குழு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.