இருட்டுக்கு என்ன விலை?


ஸ்க்ரீன் சென் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. சாய் தன்ஷிகா, விமலா ராமன், யோகி பாபு, விடிவி கணேஷ், சாக்க்ஷி சவுத்ரி


நடித்திருக்கும் இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு வி.இசட் துரை இயக்கியுள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.சுந்தர் சி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதாநாயகனாக நடித்திருக்கும் இருட்டு படத்தில் நெருக்கமான காட்சிகளும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக சுந்தர்.சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதால் இருட்டு படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.சமீபத்தில் வெளியான ஆதித்ய வர்மா, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் இடைவிடாத முத்தக் காட்சிகள் இடம்பெற்றதால் குடும்பத்துடன் படம் பார்க்க வரும் கூட்டம் குறைந்திருக்கிறது. ஆனால், இளைஞர்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இருட்டு படத்திலும் அதுபோன்ற முத்தக்காட்சி இருக்கிறது என்பதை சுந்தர்.சி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

இருட்டு படத்தின் வியாபார விவரம் பின்வருமாறு...

சென்னை, திருநெல்வேலி ஏரியா - 78 லட்ச ரூபாய்

திருச்சி ஏரியா - 55 லட்ச ரூபாய்

சேலம் ஏரியா - 45 லட்ச ரூபாய்

மதுரை ஏரியா - 70 லட்ச ரூபாய்

செங்கல்பட்டு, கோவை - இரண்டு கோடி ரூபாய்

கேரளா, கர்நாடகா மாநில உரிமை - 30 கோடி ரூபாய்(விற்பனையாகவில்லை)

வெளிநாட்டு விநியோக உரிமை - 70 கோடி ரூபாய்(விற்பனையாகவில்லை).
Powered by Blogger.