தெற்கு அதிவேக சாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை!!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மூடி, முழுமையான பணிகள் இடம்பெற்ற பின்னர் மீள திறப்பதை பற்றி ஆராய்வதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் நேற்று(03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;

“.. அண்மையில்அதிவேக நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் இருந்தன. இந்த உயிர்களை முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதை நான் காண்கிறேன்.

தீயணைப்புபடை இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை,எந்த வேலையும் முடிக்கப்படவில்லை. முந்தைய அரசாங்கம் வலுக்கட்டாயமாக திறந்து வைத்ததாக. நாங்கள்அதைக் கவனித்து இறுதி முடிவை எடுப்போம் என்றும் நாங்கள் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது..” என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.