சிக்மண்ட் ஃபிராயிட் பற்றி தமிழில் ஒரு புதிய நூல்!!

இங்கிலாந்தில் இருக்கும் டாக்டர் தம்பிராசா அவர்கள் “சிக்மண்ட் பிராயிட் ஓர் அறிமகம்” என்னும் நூலை எழுதியுள்ளார். இதனை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (270 பக்கங்கள் . விலை 125 ரூபா)


இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான டாக்டர் தம்பிராசா அவர்கள் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் மற்றும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இவருடைய பணிகளே.

அவரது இந்நூல்  சிக்மண்ட் பிராயிட் முன்வத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது, இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது, மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பையும் கோடிட்டுக் காட்டுகிறது.

“சிக்மண்ட் பிராயிட் ஓர் அறிமுகம்” நூலின் பின் அட்டையில் இருந்து ...

•பெரிதும் அறியப்பட்ட பெயர்;
•உளவியலுக்கு முகம் கொடுத்தவர்;
•நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறிவர்;
•பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்;
•தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதி பெயர் பெற்றவர்

ஆனாலும்:

•நனவிலி மனம் பற்றிய கருத்தாக்கம் அவருக்கு முன்னரே அறியப்பட்டு வந்தது.
•அவர் முன்வைத்த பல கோட்பாடுகளுக்கு அறிவியல் சான்றுகள் இல்லை;
•அவர் கூறிய கனவுகளின் பொருள் விளக்கத்தை இன்றைய அறிவுலகம் ஏற்றுக்கொள்வது இல்லை;
•அவர் கண்டுபிடித்த உளப்பகுப்பாய்வு சிகிச்சைமுறை உள நோய்களுக்கு பயனளிப்பது இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே இது இன்றைய நாளில் இது பயன்படுத்தப்படுவது இல்லை.

அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத சில செய்திகள்:

•இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் போர் பற்றி முக்கிய கடிதங்கள் பல பரிமாறிக்கொண்டார்கள்;

•அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் கடுமையாகச் சாடி எழுதியவர்; மதம் பற்றி நான்கு நீள் கட்டுரைகள் வரைந்துள்ளார்.

•அவர் பெயர் இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, ஆனாலும் அவருக்கு அந்த பரிசு வழங்கப்படவில்லை;

•அவரது இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தானாக கருணைக் கொலை வேண்டி தனது 83-வது அகவையில் உயிர் நீத்தார்;

•அவர் முன்வைத்த பல கருத்துகள் இன்று வேறு வடிங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

சிக்மண்ட் பிராய்ட் பற்றி நூல் அசிரியர் டாக்டர் தம்பிராசா அவர்கள் குறிப்பிடும் இக் கருத்துகள் குறித்து  விரிவாக அறிவதற்கு படியுங்கள் அவரது “சிக்மண்ட் பிராய்ட் ஓர் அறிமுகம்” நூலை..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.