எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...!

பரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...
பளிச்சிடும் பால் போன்ற புன்னகை...
அணைப்பதற்காகவே அடிக்கடி
விரியும் பிஞ்சுக் கைகள்... அதில்
அடைக்கலமாகத் துடிக்கும் என்னை..,


எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...!

வளர்ந்து கொண்டே இருக்கின்றாய் - நான்
குழந்தையாகிக் கொண்டேயிருக்கிறேன்...
பால்ய பருவம் நோக்கி என் நாட்களை
நகர்ந்துக் கொண்டே இருக்கின்றாய் - நான்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றேன் என்பதை..,

எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா....!

அவள் ஸ்பரிசங்கள் மடியிலிட்டு தாலாட்டும்
தாயாய் உணர வைக்கும் தருணங்களில்
நான் தாய் என்பதே மறந்து சேயாய் சுகிக்கும்
அவள் அணைப்பு ஒரு தாய்மையை
உணர்த்திடும் வரமெனக்கு என்பதை..,

எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா....!

கூட்டுப்புழுவாய் இருந்தவள் - இப்போது
பட்டாம்பூச்சியாய் பரிணாமடைகிறாள்...
பறக்கவிட்டே ரசிக்கிறேன்...
பற்றுதலுக்காய் பாசத்தை விசையாய்
கொடுத்திருக்கின்றேன்...

அன்பால் எனை நிறைக்கும்
முத்தங்களால் எனை நனைக்கும்
உன்னை
எப்படிச் சொல்வேனடி.... என் கண்ணம்மா...
நீ போதுமெனக்கு.... நீ போதுமே.

-சங்கரி சிவகணேசன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.