சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்ட அழைப்பு!!!

சர்வதேச மனித உரிமைகள் தினமான
எதிர்வரும் 10ஆம் திகதி  செவ்வாய்க்
கிழமையன்று சிறீலங்கா அரசால் திட்டமிட்ட

இனப்படு கொலை அரங்கேற்றப்பட்ட
முல்லைத்தீவு மண்ணில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம்
ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்து தமிழர் தாயகத்தினைச் சேர்ந்த
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தினை
முன்னெடுக்கவுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர்
போராட்டத்தின் 1008ஆவது நாளையும்
பிரதிபலிக்கும் முகமாக நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.அங்கிருந்து முல்லை த்தீவு மாவட்டச் செயலகம் வரையில் பேரணி யாக செல்லவுள்ளதோடு செயலகத்திற்கு முன்னால் தமது வலியுறுத்தல்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மனுனைஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் இந்தப்போராட்டத்தின்போது,
வடக்கு கிழக்கில் வலிந்து
காணாமலாக்கப்பட்டவர்களுக்கா ன
பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசாங்கம்
செய்வதற்காக அந்த விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்குரிய
நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் கூட்டிணைந்து எடுக்க வேண்டும் என்பதைவலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட
உறவினர்களின் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி மரியசுரேஸ் குறிப்பிட்டதோடு அனைவரையும் போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்புவிடுத்துள்ளார்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.