தேர்தலில் ரூ.1000 கோடியை ஏமாற்றிய தினகரன்: புகழேந்தி!!

தினகரன் தன்னை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார் என்று அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கும் அவருக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அமமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் கடந்த செப்டம்பர் மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.



அதனைத் தொடர்ந்து, தினகரனை கடுமையாக விமர்சித்து வந்த புகழேந்தி, அமமுக அதிருப்தியாளர்களை அழைத்து சேலத்தில் போட்டிக் கூட்டம் நடத்தி அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தார். இதனிடையே அமமுகவை பதிவு செய்ய பிரமாணப் பத்திரம் அளித்தவர்களில் 14 பேர் கட்சியை விட்டு விலகிவிட்டதாகவும்,



ஆகவே, அமமுக பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று புகழேந்தி மனுதாக்கல் செய்தார். தேவகோட்டையில் இன்று (நவம்பர் 30) செய்தியாளர்களை சந்தித்தபோது இதற்கு பதிலளித்த தினகரன், “புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால் அமமுகவை பதிவு செய்வதில் 0.01 சதவிகிதம் கூட பாதிப்பு ஏற்படாது. நீதிமன்றம்தான் அவருக்கு குட்டு வைக்கும். அவர் யாரிடமோ விலைபோய்விட்டார்” என்று விமர்சித்தார்.


 இதனிடையே சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “யாராவது நான் பணம் கேட்டேன் என்று சொன்னால் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். தினகரன் என்னைத் திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார்.


தினகரனையும், பழனியப்பனையும் பார்த்துக் கேட்கிறேன். மக்களவைத் தேர்தலில் சேலத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை கைமாறியுள்ளது. இதனை என்னால் நிரூபிக்க முடியும். ஒரே இடத்திற்கு 100 கோடி ரூபாய் சென்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 800-1000 கோடி ரூபாய் வரை யாரிடமிருந்தோ பெற்று வந்து அதனை வேட்பாளர்களுக்கு அளிக்காமல் தினகரன் ஏமாற்றியிருக்கிறார்.



 இதனை அவரே சொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். இதில் முக்கிய பங்கு வகித்தவர் பழனியப்பன்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.