கோட்டாபயவுக்கு பூரண ஆதரவு -ரோஸி!
கொழும்பு நகர பகுதியில் அங்கங்கே குப்பைகளை போடும் நபர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு கேமராக்களை பொருத்துவதற்கு கொழும்பு நகர சபை தீர்மானித்துள்ளது.
கொழும்பு நகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்க, நகரில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த அபராத பணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கொழும்பு நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நகர அலங்கார திட்டதிற்கு நகர மேயர் என்ற வகையில் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக கொழும்பு நகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து நகர சபை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை