பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது!
கிளிநொச்சி, பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 15 டிப்பர் வாகனங்கள் மற்றும் 10 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று, கிலாளி, தர்மக்கேணி, அரத்தினகரன போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான மண் அகழ்வினை எதிர்த்து கடந்த 17ஆம் திகதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏ9 வீதியை மறித்து பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பளை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் பளை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை