திரு வேலுப்பிள்ளை சேனாதிராசா அவர்கள் காலமாகிவிட்டார். !
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் திரு.சே. கேதீஸ்வரன் அவர்களின் அன்புத்தந்தை திரு வேலுப்பிள்ளை சேனாதிராசா அவர்கள் காலமாகிவிட்டார்.
பரந்தன் குமரபுரம் முருகன் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட செல்வம் அண்ணை என அழைக்கப்பட்ட சேனாதிராசா அவர்கள் என்மீது மிகுந்த பாசம் கொண்டவர். எனது வளர்ச்சியிலும் நலனிலும் ஒரு தந்தையைபோல அக்கறை கொண்டவர். தனது பிள்ளைகளில் ஒருவராகவே என்னை அவர் நடத்தினார்.
இன்று அவரது இழப்பால் அவரது குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது போலவே எனக்கும் அவரது இழப்பு பேரிழப்பாகும். அவர் அற்புதமான மனிதர். கடந்த 23 வருடங்களாக நான் அவருடன் பழகியிருக்கிறேன். விடுதலையை நேசித்த பெரும்பற்றாளன்.
அவரை நாம் இழந்துவிட்டோம் என்பது பொய்யாகிப்போகாதா என மனம் ஏங்குகிறது.
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை அவரது இல்லத்தில் நடைபெற்று கோரக்கன்கட்டு மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை, தலைமைப்பணிமனையுடன் இணைந்து மாவட்ட பணிமனையும் தெரிவித்துக்கொள்கிறது.
மாவட்ட அமைப்பாளர்,
தமிழ்த்தேசியமக்கள் முன்னணி,
கிளிநொச்சி.

.jpeg
)