நால்வர் பலி!! சீரற்ற காலநிலையால்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மணித்தியாலங்களில் குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
தொடரும் மழையுடனான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவும் பதிவாகியுள்ளது.
பண்டாரவளை - வெல்லவாய வீதியின் எல்ல பிங்கய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை எல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாவிடுதி ஒன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
வெள்ள நிலைமை காரணமாக எல்ல ரயில் பாதையின் பிங்கெய பகுதியில் சரிந்து விழக்கூடிய மரமொன்றை பிரதேசவாசிகள் தரித்துள்ளனர்.
இதேவேளை மாத்தளை ரத்தொட்ட பிரதான வீதியில் மரமொன்று சரிந்துள்ளதுடன் வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
மழையால் கதிர்காமம் மாணிக்ககங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செல்ல கதிர்காம ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையால் சோமாவதி பனிதபூமி வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
இதேவேளை பதுளு ஓயா பெருக்கெடுத்தமையால் ஹாலி-எல உடுவர பகுதியில் உள்ள 5 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் பலவற்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் அந்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மொனராகலையில் நிலவும் அசாதாரண காலநிலையால் இதுவரை 1150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை