யாழ். நெல்லியடியில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ் நெல்லியடி பகுதியில் கைக்கலப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.


நெல்லியடி ராஜாராமன் கிராம பகுதியில் இளைஞர்கள் சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ள நிலையில்

அது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்கலப்பில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

இந்ந்த நிலையில் கைதான மூவரில் ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதை பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.