இடமாற்றம் பெற்றனர் மேல் நீதிமன்ற நீதிபதிகள்!!

மன்னார், மட்டக்களப்பு உள்பட 4 தமிழ்பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன், கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், காலி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன், கொழும்பு மேல் நீதிமன்றம் (இல.5) மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், நீர்கொழும்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என பிரதமர் நீதியரசர் தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.