பெண்ணொருவர் வவுனியா விபத்தில் படுகாயம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த விபத்து சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியா ஏ9 வீதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர் பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் படு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.