ரொறோன்ரோவில் தமிழர்களின் பாரம்பரிய மாதம்!

ரொறோன்ரோவின் புகழிற்கும், வளர்ச்சிக்கும் நன்கு பங்கேற்றும் தமிழ்ச்சமூகத்திற்காக தமிழர்களின் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகின்றது. இது தமிழர்களின் பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல்- தமிழ் மொழியையும், தமிழர்களின் பண்பாட்டையும் அறிய உதவுகின்றது.


ரொறோன்ரோவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எங்களுடைய சமூகத்தை வலிமையாக்குவதிலும், எங்கள் ரொறோன்ரோ நகரின் பொன்மொழியான “எம் சமூகத்தில் பன்முகத்தன்மை” என்பதிலும் முக்கிய பங்கேற்றுள்ளனர். ரொறோன்ரோ தமிழர்களின் முக்கியத்திற்குரிய இப்பங்கை ஏற்கின்றது. பன்முகத்தன்மை எமக்கு சமூகம், அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரத்தில் வலிமையைத்தருகின்றன. உலகிலேயே பல்பண்பாடு இடங்களில் ஒன்றான ரொறோன்ரோவில் வெவ்வேறு சமயங்கள், நம்பிக்கைகள் மதிக்கப்பட்டும் ஏற்கப்பட்டும் வருகின்றன.

“இதற்காக இன்று, நான், மேயர் யோன் ரொறி, ரொறோன்ரோ நகரசபை சார்பாக தை 2020ஐ ரொறோன்ரோவின் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கின்றேன்.” – என்று மேயர் யோன் ரொறி தன் சமூகவலைத்தளங்களில் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

VIA John Tory (Instagram)
Translation by Nithurshana Raveendran
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.