தீபங்கள் பேசும் - தீப வகைகள் .......!!

ஒளியைத் தந்து இருளை அகற்றும் தீபங்கள் மனதிற்கு அமைதியையும் வீட்டிற்கு ரம்மியத்தையும் தருகின்றன. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், “தீபலட்சுமியே நமோ நம” என்று கூறி வணங்குவது அவசியம் என்கின்றனர்.


தீபத்திலும் பல வகைகள் இருக்கின்றன. அவை;

சித்ர தீபம் - வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

மாலா தீபம் - அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

ஆகாச தீபம் - வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம் - தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபம் ஜல தீபம் ஆகும்.

படகு தீபம் - நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும். கங்கையில் இத்தீபம் அதிக அளவில் ஏற்றப்படுகின்றன.

சர்வ தீபம் - வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.


மோட்ச தீபம் - முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

சர்வாலய தீபம் - கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

அகண்ட தீபம் - மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

லட்ச தீபம் - ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

மாவிளக்கு தீபம் - அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றித் திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.