உக்ரேன் விமான விபத்து - தவறை ஒப்புக்கொண்டது ஈரான்!

ஈரானில் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட உக்ரேனிய விமானம், மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரானே தனது ஏவுகணை தாக்குதலால் உக்ரேனிய விமானத்தை வீழ்த்தியதாக மேற்குலகம் கூறிய கருத்தை ஈரான், இதற்கு முன்னதாக முற்றுமுழுதாக மறுத்திருந்தது.

இந்தநிலையில், உக்ரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், ‘பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போதே, குறித்த விமானம் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சந்தேகம் வெளியிட்டிருந்ததோடு, இதுதொடர்பான கணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இதில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரித்தானியர்கள் மற்றும் மூன்று ஜேர்மானியர்கள், 11 உக்ரேன் நாட்டவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உட்பட விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.