அரபு உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளர் சுல்தான் கபூஸ் காலமானார்!

அரபு உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளரான சுல்தான் கபூஸ் பின் செய்ட், தனது 79ஆவது வயதில் காலமாகியுள்ளார்.


சமீபகாலமாக பெருங்குடல் புற்றுநோயால் பாதிப்பால் அவதிப்பட்டுவந்த நிலையில், அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை காலமானார்.

வளைகுடா போர்ப்பதற்றத்தில் உள்ள இந்த காலகட்டத்தில் இவரது இழப்பு மத்திய கிழக்கிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகின்ற நிலையில், ஓமானில் மூன்று நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தேசியக்கொடி 40 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 4.5 மில்லியன் மக்கள் வாழும் ஓமானின் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுல்தான் கபூஸிற்கு சகோதரர்களோ, பிள்ளைகளோ இல்லை. எனினும், தனது மரணத்தின் பின் அரச குடும்பத்தில் குழப்பம் வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக, 2011ஆம் ஆண்டில் அரச வாரிசை தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இதனால், அரசரை தேர்ந்தெடுக்கும் உயர்சபையில் 5 உறுப்பினர்களை நியமித்துள்ளார். அவர்களே காலமான சுல்தான் கபூஸை தொடர்ந்து அரியணை ஏறப் போவது யார் என்பதை 72 மணி நேரத்தில் தீர்மானிப்பர்.

சுல்தானின் மூன்று உறவினர்களான அசாத், ஷிஹாப் மற்றும் ஹைதம் பின் தாரிக் அல்-சையத் ஆகியோரில் ஒருவர் அடுத்த சுல்தானாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சுல்தானின் அடிப்படை சட்டத்தின்படி, சுமார் 50 ஆண் உறுப்பினர்களைக் கொண்ட ரோயல் குடும்ப சபை – அரியணை காலியாகி மூன்று நாட்களுக்குள் ஒரு புதிய சுல்தானைத் தேர்வு செய்ய வேண்டும்.

1970ஆம் ஆண்டு, ஓமானின்த சுல்தான் கபூஸ் பின் செய்ட், பிரித்தானியாவின் உதவியுடன் இரத்தமற்ற சதிப்புரட்சியில் தனது தந்தையை பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அரியணை ஏறினார்.

இதன்பிறகு தனிமைப்பட்ட, உட்கட்டமைப்பு இல்லாத நாடாக இருந்த ஓமானை, தனது நவீன திட்டங்களுடனும், எண்ணெய் செல்வத்தைப் பயன்படுத்தியும், ஓமானை வளர்ச்சியான பாதைக்கு அழைத்துச் சென்றார்.

குறிப்பாக, சுல்தான் கைபூஸ் வளைகுடா மற்றும் பரந்த மத்திய கிழக்கில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் அவரே முக்கிய நபராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.