மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் நடைபவனி!!

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கலை கலாச்சார சமூக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றன.


மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இணைந்து  ஏற்பாடு செய்த மாபெரும் நடை பவனியானது இன்று (சனிக்கிழமை ) காலை 9.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது.

இவ்வாறு பாடசாலையில் ஆரம்பித்த நடை பவனி மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியூடாக சென்று எழுத்தூர் வீதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து பிரதான வீதியூடாக சென்று மன்னார் பிரதான பாலத்தடியை சென்றடைந்த நடை பவனி மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது. குறித்த நடை பவனியின் போது பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நடை பவனி ஆரம்பிக்கப்பட்டபோது வட.மாகாணத்தில் முதல் முறையாக புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவ ரீதியாக ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.