வரலாற்றை மாற்றுவாரா கோலி?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தடைந்தனர். முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 14 ஆம் தேதி மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.


2019 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், மேற்கிந்திய தீவுகள் அணி ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது இந்திய அணி. அதே போல் 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது

2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 2-0 என தொடரை கைப்பற்றியது. வங்காளதேசம் அணியுடன் மூன்று டி20 போட்டிகள் இடம்பெற்ற தொடர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. அதேபோல் டெஸ்ட் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை வென்றது. கடந்த வருடம் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணி, இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வென்று தொடர் வெற்றிகளை கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்," இந்திய அணி சமீப காலமாகவே மற்ற அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றிகளை குவித்து வருகிறது. அதே போல் தனது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் கூடுதல் வலிமையுடன் களமிறங்க இருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியை விளையாடுவதற்கான மனநிலை குறித்து கேள்வியெழுப்பியபோது “தற்போது ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவி வருவதால், ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கோலா கரடிகள் , கங்காருக்கள் எனப் பல உயிரினங்கள் பலியாகி உள்ளன. 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீயில் சேதம் அடைந்துள்ளது. இந்த காட்டுத் தீயில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் மாதம் முதலே காட்டுத்தீ பல்வேறு மாகாணங்களில் பரவி வருவதால் தற்போது ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் அவர்களது சோகத்தை போக்கி, அவர்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.

மற்ற அணிகளுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் திணறுவதே வரலாறு சொல்லும் உண்மை. கடந்த வருடம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-2 என ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதுவரை இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 137 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 77 வெற்றிகளையும், இந்திய அணி 50 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 27 வெற்றிகளைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை பறிகொடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றியை நிலைநாட்டுமா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கோலி தலைமையில் வெற்றியை மட்டுமே பெற்றுவரும் இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.