பல்கலைக்கழகமாகிறது வவுனியா வளாகம்!!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் பலரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முயற்சி எடுத்தவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறே காணப்பட்டது.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட விடயம் வவுனியா வளாகத்தின் செயற்பாட்டில் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்து அனைத்திலும் ஏமாற்றப்பட்டனர். இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த வகையில் வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே விரைவில் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை