தேரர் STFகட்டளை அதிகாரி மீது குற்றச்சாட்டு!!

நாட்டில் இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையில் புலனாய்வு பிரிவினை கலைத்துவிடுவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் நடவடிக்கை எடுத்திருந்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த குற்றச்சாட்டை நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் முன்வைத்துள்ளார்.

இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏப்ரல் தாக்குதலுக்கு 08 மாதங்களுக்கு முன்னதாக களவாஞ்சிக்குடியில் உள்ள புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுவரை, களவாஞ்சிக்குடி விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமில் புலனாய்வு பிரிவு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு அங்கிருந்த புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டுவிட்டதகவும் மாகல்கந்தே சுதந்த தேரர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.