மலசல கூடம் பேப்பருக்கு ஒரு ரோபாட்!
நாட்டிலுள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கண்டுபிடிக்க மாட்டார்களா என்று விளையாட்டாக எதையாவது குறிப்பிடும்
வழக்கம் பல நண்பர்கள் கூட்டத்திடமும் இருக்கும். அப்படியொரு நண்பர் கூட்டத்திடம் உருவான ஐடியா தான், ‘ரோல்பாட்’(RollBot).
“பேப்பர் ரோல் இல்லாததைப் பார்க்காமல் டாய்லெட்டைப் பயன்படுத்திவிட்டு, மிகவும் கஷ்டப்பட்டு போனேன். இதற்கும் ஒரு டெலிவரி ஆப்ஷன் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என நண்பர்கள் சிலர் விளையாட்டாக பேசிய விஷயம் இன்று ரோல்பாட் வடிவில் உருவாகியிருக்கிறது. ரிலாக்ஸாக இப்படி சொன்னாலும், சீரியஸாகவே இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.
மனிதர்களின்றி ரோபாட்களின் மூலம் டெலிவரி செய்யும் டெக்னாலஜியில் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வீட்டிலிருக்கும் அன்றாட வேலைகளை செய்யும் விதத்தில் இதனை வடிவமைத்திருக்கிறார்கள் சார்மின் நிறுவனத்தினர். இதுமட்டுமில்லாமல் தியேட்டர், விளையாட்டு மைதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் போன்றவற்றிலுள்ள டாய்லெட்டுக்குச் செல்வதால், அந்நிகழ்ச்சியின் முக்கியமான தருணத்தை பார்க்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக டாய்லெட்களில் VR ஹெட்செட்களைப் பயன்படுத்தி நேரலையில் பார்க்கும் வசதியையும் உருவாக்கியிருக்கின்றனர்.
லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்றுவரும் CES 2020 நிகழ்ச்சியில் சுருட்டக்கூடிய டிவி, மடங்கும் கேமரா என எத்தனையோ புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. மின்னம்பலத்தில் அவற்றை பிரமிக்கவைக்கும் ரோபோ டெக்னாலஜி!, 2020-ஐ மாற்றப்போகும் டெக்னாலஜி புரட்சி! ஆகிய செய்திகளில் பார்த்தவர்கள் பிரமித்தது போலவே, நேரில் பார்த்தவர்களும் பிரமித்தவை இவை தான். ஆனால், அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்த டெக்னாலஜி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
கருத்துகள் இல்லை