ஆயுளுக்கும் வேண்டுமென உயிர்சாசனம்!!

நாணம் எனும் சாரலை
என்மீது தூவி விட்டு
காதலின் போர்வைக்குள்
ஒழிந்துகொள்கிறாள்...

முளைத்தெழ
மழைக்காக
காத்திருக்கும் விதையென
அவள் பார்வைச் சிறகுக்காய்
அடிநெஞ்சில்
துளிர்க்கிறது துளி காமம்.

மோகம் மெல்ல சிறகு கொடுக்க
உடல் எழும்பிச் சுழல்கிறது
ஒன்பதாம் திசையில்...

என்னை ஆளத் தொடங்கிய
அவளை வெல்ல துடிக்கும்
வேட்கையில்
மீண்டும் மீண்டும் அவளுக்குள்
மூழ்கிப்போகிறேன்..

நம்மை மறந்து
லயித்துக்கிடந்த பொழுதுகளெல்லாம்
மீண்டும் மீண்டும்
ஆயுளுக்கும் வேண்டுமென
உயிர்சாசனம்
எழுதிக்கொள்கிறது காதல்...!

-சங்கரி சிவகணேசன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.