கோட்டாபய சீனாவுக்கு!மஹிந்த இந்தியாவுக்கு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் 8ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதம் முதல் வாரம் இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு பீஜிங் பரிந்துரைத்திருந்தது என்றும், பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, 14, 15ஆம் திகதிகளில் பயணத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கோட்டாபய மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவர் நவம்பர் 28 தொடக்கம் 30 வரை இந்தியாவில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மஹிந்த மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களை மஹிந்த இந்தப் பயணத்தின்போது சந்திக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.