மனிதன் மிகவும் சுயநலமான ஒரு மிருகம்.!!

தனது இருப்பை காப்பாற்றுவதற்காக வகைதொகையின்றி மிருகங்களை கொல்லும் மனப்பான்மையில் இருந்துதான் ஒரு நாட்டின் இனத்தின் இருப்புக்காக, அடுத்த நாட்டு, சக இன மனிதர்களையே வகை தொகையின்றி கொல்லும் மனோநிலையும் ஏற்படுகின்றது..


இயற்கை சமநிலையை பேணுவதற்காக மிருகங்களை கொல்பவர்கள், இயற்கை சமநிலையை குழம்பும் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுப்பதற்கு ஏன் ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை.. ...
இயற்கை சமநிலையை சரியாக்க மிருகங்களை வகை தொகையின்றி கொல்வதை எனது மனம் ஏற்க மறுக்கின்றது....

இயற்கை சமநிலையை  இயன்ற அளவு இயற்கையினூடாகவே பேனுவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும்....

A/L படிக்கின்ற காலத்தில் அமெரிக்காவில் ஏதோ ஒரு மாநிலத்தில் காடுகளில் மான்களின் அதிக பெருக்கத்தினால் அவை சிறிய தாவரங்களை எல்லான் உணவாக உண்டு தீர்க காடு அழிந்து பாலைவனமாக உருவாகும் சூழல் உருவாகிய போது அங்கே சில மலை சிங்கங்களை விட்ட போது அவை மான்களை உணவுக்காக வேட்டையாட, மான்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, காடு அழிவதில் இருந்து காப்பாற்றப்பட்டது என படித்தது ஞாபகம்.....

அவுஸ்ரேலிய ஒட்டகங்களின் பெருக்க விடயத்திலும் இவ்வாறான நடைமுறையை கடைப்பிடிக்கலாம்.....

அல்லது ஒட்டகங்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாத வகையில் மலடாக்கம் செய்யலாம்.....

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முதல் இயற்கை சமநிலையை குழப்பும் மனிதனின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மனிதனுக்கு ஒரு நியாயம் மிருகங்களுக்கு  ஒரு நியாயம் என்பது எந்த வகையில் நியாயம்.  இயற்கை சமநிலையை பெரிதும் குழப்பும் மனிதனை அழிப்பதற்குதான் இயற்கை அவ்வப்போது பேரழிவுகளை கொடுத்து கொண்டிருக்கின்றதோ தெரியாது ..😢😢

 Yoga Valavan Thiya 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.