மட்டக்களப்பு காணிக்கை மாதா தேவாலயத்தில் தைப்பொங்கல் விழா!

மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா தேவாயலத்தில் கிறிஸ்தவ வாழ்வு சமூத்தினர் கலாசார பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்து நடத்தினர்.
காலை 6.00மணிக்கு பொங்கல் திருப்பலி ஏற்பாடு செய்யப்பட்டு பங்குத்தந்தை அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலமையில் பெருந்திரளான மக்களுடன் திருப்பலி இடம்பெற்றது.உழவர்களின் திருநாளம் இத்திருநாளில் வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள் அவர்களின் குடும்பங்கள் அனைவருக்காகவும் வேண்டியதுடன் நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டு திருப்பலி நிறைவடைந்தது. தாண்டவன்வெளி கிறிஸ்தவ வாழ்வு சமூகம் இதை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.