ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

சவுதி அரேபியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ இந்த தகவலினை வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்;டவர்களும், 90 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் ரிப்ரீவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி மாத்திரம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் 3 பேர் சிறுவர்கள் எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.