காட்சிக்கு வருகிறது ட்ரம்ப் மீதான குற்ற விசாரணை ஆவணங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்ற விசாரணை ஆவணங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இன்று(வியாழக்கிழமை) நண்பகல் முதல் இந்த ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றப் பிரேரணை ஆவணங்கள் செனட் சபைக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டன.
இந்தநிலையில் செனட் சபையில் ட்ரம்ப் மீதான குற்ற விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு அரசாங்கதிற்கு ட்ரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை