அமைச்சரின் சொகுசு வாகனம் மோதி விபத்து!!

வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பயணித்த ​சொகுசு வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் ​புத்தளம்- திரு​கோணமலை வீதியின் ரன்பத்வல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 35 வயதன பி.ரஞ்சன் குமார எனும் குடும்பஸ்தரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.