மாலைகள் சூடி வேள்விக்கு!
பெரியமனுஷியாகி விட்டேனாம்..
புதிய சட்டங்கள் அமுலில்
கண்ணீரால் நிரப்பப்படும் பருவம்..
முன்பு போல் அண்ணனுடன்
உரசிக்கொள்ள முடிவதில்லை..
அண்ணனும் நானும்
தூரமாய் போனோம்
சுடுகிறது வயது..
தம்பியை பார்த்ததும்
கட்டித்தழுவி சண்டை போட்ட கைகளை
கட்டிப்போட்டாள் அம்மா..
அருகருகே இருந்தும்
இடைவெளி அதிகரித்தது
பருவமடைந்ததால்..
மாமா சித்தப்பா மடிமீது அமர்ந்தால்
பார்வையால் எரிக்கிறாள் அம்மா
மகளென்னும் உறவில் கூட
பால் வேறுபாட்டை உணர்த்துகிறாள்..
வீட்டிற்கு வரும்
ஆண்களிடம் பேசினால்
கடிந்துகொள்கிறார் அப்பா..
அயல்வீட்டுச் சிறுவர்களோடு
ஆனந்தமாய் கழிந்த
மாலைப்பொழுதுகளெல்லாம்
அனலாய் கொதிக்கிறது...
பருவம் எய்தியதால்....
வைபவங்கள் திருவிழாகள்
சென்றாலும்
அம்மாவோடுதான் செல்ல வேண்டுமாம்
ஏனென்றால் பூப்பெய்து விட்டேனாம்..
அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள்...
இன்னும் புதிது புதிதாய் ஏதேதோ....
இருந்தும்
பொத்தி பொத்தி பக்குவமாய்
வைத்துக்கொண்டு...
ஊரெல்லாம் கூட்டி
என்னை
வியாபார பொருளென்றும்
இனி இவள் காதல் வசப்படுவளென்றும்
அறிவித்தும்....
மாலைகள் சூடி வேள்விக்கு
ஆயுத்தம் செய்கிறார்கள்....
-சங்கரி சிவகணேசன்-
புதிய சட்டங்கள் அமுலில்
கண்ணீரால் நிரப்பப்படும் பருவம்..
முன்பு போல் அண்ணனுடன்
உரசிக்கொள்ள முடிவதில்லை..
அண்ணனும் நானும்
தூரமாய் போனோம்
சுடுகிறது வயது..
தம்பியை பார்த்ததும்
கட்டித்தழுவி சண்டை போட்ட கைகளை
கட்டிப்போட்டாள் அம்மா..
அருகருகே இருந்தும்
இடைவெளி அதிகரித்தது
பருவமடைந்ததால்..
மாமா சித்தப்பா மடிமீது அமர்ந்தால்
பார்வையால் எரிக்கிறாள் அம்மா
மகளென்னும் உறவில் கூட
பால் வேறுபாட்டை உணர்த்துகிறாள்..
வீட்டிற்கு வரும்
ஆண்களிடம் பேசினால்
கடிந்துகொள்கிறார் அப்பா..
அயல்வீட்டுச் சிறுவர்களோடு
ஆனந்தமாய் கழிந்த
மாலைப்பொழுதுகளெல்லாம்
அனலாய் கொதிக்கிறது...
பருவம் எய்தியதால்....
வைபவங்கள் திருவிழாகள்
சென்றாலும்
அம்மாவோடுதான் செல்ல வேண்டுமாம்
ஏனென்றால் பூப்பெய்து விட்டேனாம்..
அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள்...
இன்னும் புதிது புதிதாய் ஏதேதோ....
இருந்தும்
பொத்தி பொத்தி பக்குவமாய்
வைத்துக்கொண்டு...
ஊரெல்லாம் கூட்டி
என்னை
வியாபார பொருளென்றும்
இனி இவள் காதல் வசப்படுவளென்றும்
அறிவித்தும்....
மாலைகள் சூடி வேள்விக்கு
ஆயுத்தம் செய்கிறார்கள்....
-சங்கரி சிவகணேசன்-
கருத்துகள் இல்லை