பிரித்தானிய பாராளுமன்ற பொங்கல் விழா!!

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரம்பரிய தமிழ் உடைகள் அணிந்து தைப் பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கௌரவப்படுத்தியதுடன் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதியளித்தனர்.


பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையின்(BTF) ஏற்பாட்டில் வருடா வருடம் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வு தை மாதத்தினை “தமிழ் மரபுத் திங்கள்” (Tamil Heritage Month) என பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கருப்பொருளை முன்வைத்து ஜனவரி 14ஆம் திகதி அன்று இடம்பெற்றது.

நிகழ்வு இடம்பெற்ற பாராளுமன்ற மண்டபம் கரும்பு, வண்ணமயமான ‘கோலம், கலைப் படைப்புகள், இசைக்கருவிகள், பொங்கல்பானை என்பனவற்றால் அலங்கரிக்கப்பட்டு தமிழ்மக்கள் போற்றும் பாரம்பரியதின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தது. தமிழ் பள்ளி மாணவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் தமிழரகள் பேணிக் காக்கும் விழுமியங்களை வெளிப்படுத்தினர்.

தைப்பொங்கல் என்பது இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா உட்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தமக்களாலும் தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் விழா. “தைப்பொங்கல்’ திருநாள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழையடிவாழையாகத் தொடர்கின்றது.

தமிழ் என்பது இந்தியா, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருமொழி. இது 7.5 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கான முதல்மொழியாகவும் ஏறத்தாழ 6 இலட்சம் மக்களுக்கு இரண்டாவதுமொழியாகவும் உள்ள உலகின் மிகப் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும்.

தற்போது. கி.மு 300 முதல் கி.பி 100 வரைபயன்படுத்தப்பட்ட தமிழின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றான பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் இலங்கையிலும் தாய்லாந்து மற்றும் எகிப்தில் உள்ள வணிகப் பொருட்களிலும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் சிறந்த கட்டிடக் கலைக்கு உரித்துடையவர்கள். கி.பி1011 இல் பேரரசர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர்பிரஹதிஸ்வரர் ஆலயம் அவரது பேரரசின் பிரமாண்டத்திற்கோர் எடுத்து காட்டாக வடிவமைக்கப்பட்டது.

ஆடல், பாடல், பரதநாட்டியம், தமிழ் இசைக் கருவிகளான மிருதங்கம், நாதஸ்வரம், தவில், வயலின், வீணை என்பன தமிழர்களின் செழுமையான கலை, பண்பாட்டு வடிவங்களின் முக்கிய அம்சங்களாகும்.

உலகமயமாக்கலிற்குத் தாக்குப் பிடித்து கலை, இலக்கியம், பண்பாடு, போன்ற தம் பாரம்பரியங்களை நவீனமயப்படுத்தி பேணுவதுடன் உயிர்வாழும் செம்மொழியாக தமிழை நிலைநிறுத்தி இந்த விழுமியங்களை எதிர்காலத் தலைமுறைக்கு தமிழர்கள் கையளிப்பது போற்றுதலுக்கு உரியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.