மன்னாரில் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம்!!

மன்னாரில்  மிகப்பெரிய காற்றாலை மின் நிலையத்தை wind power plant அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது. இதனை அமைக்கும் ஒப்பந்தத்தை டென்மார்க்கின் Vestas Wind நிறுவனம் பெற்றுள்ளது.


350 ஏக்கர் நிலப்பரப்பில் 104 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,

இலங்கை மின்சார சபையின் ஒப்பந்தம் மூலம் அவர்கள் இந்த வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது, அடித்தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக காற்றாலை மின் உற்பத்தி அமைப்புக்கள் 2020 மே மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.