புலிகளுக்கு புகழாரம் சூட்டிய மஹிந்த ராஜபக்ஷ!!

விமானப்படை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


திருகோணமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சீனன் குடா விமானப்படைத் தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது.

இலங்கையின் வட கிழக்கில் குறிப்பாக வன்னியில் புலிகளின் இலக்குகளை அழிப்பதற்கு எமது விமானப்படை பெரிதும் எமக்கு உதவியது. அதன் மூலமே எமக்கு புலிகள் கைப்பற்றியிருந்த நிலங்களை மீட்க முடிந்ததுடன் மக்களையும் காப்பாற்ற முடிந்தது.

கமெரா பொருத்தப்பட்ட விமானங்களின் உளவுத் தகவல் மற்றும் தாக்குதல்கள் மூலம் விடுதலைப் புலிகளை எங்களால் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது.

உலகில் உள்ள எந்த பயங்கரவாதிகளிடமும் விமானப்படை இருந்ததில்லை. இதில் விடுதலைப் புலிகள் அனுபவசாலிகள். சிறிய விமானங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள். அவர்களை எங்களால் தோற்கடிக்க முடிந்தது. இதற்கு விமானப்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது.

அந்தக் காலங்களில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குரும்பட்டித் தாக்குதல்கள் எனக் குறிப்பிடுவதுண்டு. அந்த குரும்பட்டித் தாக்குதல்களை புலிகள் இரவு வேளைகளில் கரையோரமாக தாழப்பறந்து வந்து மேற்கொண்டனர்.

அந்தக் குரும்பட்டித் தாக்குதல் மூலம் கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைந்தனர். ஆனால் எமது விமாப்படை அதனை முறையடித்தனர். எங்களுக்கு பெருமை சேர்த்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.